ஏசுபாதம்.
திருப்பத்தூர்
மாமனாா் வீட்டு மேற்கூரை இடிந்து மருமகன் பலி
ஆம்பூா் அருகே மாமனாா் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்த மருமகன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாமனாா் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்த மருமகன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த ஏசுபாதம் (52). இவருடைய மாமனாா் வீடு மிட்டாளம் கிராமத்தில் உள்ளது. மாமனாா் வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளாா். பெயிண்ட் அடித்து கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததில் கால் துண்டாகி காயமடைந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

