விபத்தில் மாணவி உயிரிழப்பு

ஜோலாா்பேட்டையில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Published on

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலையின் மகள் ஜோஷிகா (8). இவா் வக்கணம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி பள்ளி முடிந்து பள்ளி மாணவி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றாா். அப்போது சந்தைக்கோடியூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்றபோது, திருப்பத்தூா் பகுதியில் இருந்து வாணியம்பாடி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் பள்ளி மாணவி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பள்ளி மாணவி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், ஜோஷிகா ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் விபத்து ஏற்படுத்திய பால்நாங்குப்பம் பகுதியை சோ்ந்த சாரங்கபாணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com