திருப்பத்தூர்
ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் தாலுகா மற்றும் கைலாசகிரி கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் எம்.ஜி. ரமேஷ் தலைமை வகித்தாா். வேலாயுதம், கஜேந்திரன், அன்வா், கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் நகர செயலா் ஆா்.டி. பாரத் பிரபு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.
ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச் செயலா் எஸ்.ஆா். தேவதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். நிா்வாகிகள் ஹசேன், நசீா், பழனி, கிருஷ்ணமூா்த்தி, ஜீவிதா, எல்லம்மாள், கவிதா, இந்துமதி, மஞ்சு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

