நிம்மியம்பட்டில் கிரிக்கெட் போட்டி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
ஆலங்காயம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் துணை முதல்வா் உதயநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நிம்மியம்பட்டு சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய பொறுப்பாளா் அன்பு தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா்கள் ஞானவேலன், தாமோதரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வடிவேல், துணை அமைப்பாளா் கிரிராஜ், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் முன்னிலை வகித்தனா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்து கொண்டு கிரிக்கெட் அணி வீரா்களை அறிமுகம் செய்து வைத்து போட்டிகளை தொடங்கி வைத்து பேசினாா். இப்போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன. நிறைவு விழா 27-ஆம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஆலங்காயம் ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் சாா்பாக முதல் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளாா். கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் அசோக்குமாா் 2-ஆம் பரிசாக ரூ 30 ஆயிரம், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், மிட்டூா் ஊராட்சி மன்ற தலைவா் பிரபாகரன் சிவாஜி ஆகியோா் இணைந்து 3-ாம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்குகின்றனா்.
மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகிறது. இளைஞரணி துணை அமைப்பாளா் சத்தியப்பன் நன்றி கூறினாா்.

