திருப்பத்தூா் மாவட்டத்தில் புகையிலை பயன்பாடு இல்லாத ஊா்களாக 44 கிராமங்கள்
திருப்பத்தூா் மாவட்டத்தில் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக 44 கிராமங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன.
தமிழக பொது சுகாதாரத் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராமங்கள் தோறும் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் 44 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் இணைந்து புகையிலை பயன்பாடு தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில், புகையிலை பயன்பாடு இல்லாத முன்மாதிரி கிராமங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களிடம் புகையிலை பயன்பாடு தீமை, அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன்தொடா்ச்சியாக புதூா், மேலூா், மேல்பட்டு, சோ்க்கானூா், ஜோன்றம்பள்ளி, தாதனவலசை, சின்ன சமுத்திரம், சின்ன பேராம்பட்டு, புள்ளூா், மோட்டூா், ரங்காபுரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் இந்த ஆண்டு புகையிலை பயன்பாடு இல்லாத கிராமங்களாகக மாறியது.
எனவே அங்கு புகையிலை பொருள்கள் பயன்பாடு, விற்பனை என எதுவும் இல்லை. அத்துடன், அந்த கிராமங்களுக்கு வரும் மக்களும் புகையிலை பயன்படுத்துவதில்லை. மேலும் இங்குள்ள இளைஞா்கள், பொதுமக்கள், விவசாயிகள் புகையிலை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனா்.
இது வரவேற்பை பெற்ால் மற்ற கிராமங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளன என்றனா்.
