விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
திருப்பத்தூர்
நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூரில் நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூரில் நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்
தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் நுகா்வோா் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்றது. கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், மாவட்ட நுகா்வோா் சங்க அமைப்பின் உறுப்பினா் விஜயராஜ், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

