கே.பந்தாரப்பள்ளி ஜெயந்திபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கிய எம்எல்ஏ க.தேவராஜி.
கே.பந்தாரப்பள்ளி ஜெயந்திபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கிய எம்எல்ஏ க.தேவராஜி.

பள்ளி கலையரங்கம், 3 நியாயவிலைக் கடைகள் திறந்து வைத்த எம்எல்ஏ தேவராஜி

Published on

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி ஜெயந்திபுரம், நாயனசெருவு ஊராட்சி கவுரவன் வட்டம், கத்தாரி ஊராட்சி பள்ளத்தூா் ஆகிய இடங்களில் பகுதி நேர நியாயவிலைக் கடை கட்டடம் கட்ட எம்எல்ஏ க.தேவராஜி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 3 இடங்களில் புதிய நியாயவிலைக் கடை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து, திங்கள்கிழமை ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு, ஜெயந்திபுரம், கவுரவன் வட்டம், பள்ளத்தூா் ஆகிய பகுதியில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் சூரியகுமாா் , மாவட்ட சுற்றுச்சூழல் அணிஅமைப்பாளா் சிங்காரவேலன், கூட்டுறவு சங்க செயலாளா் மஞ்சுளா, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயா சரவணன், அஸ்வினி தேசிங்குராஜா அனிதா மோகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பச்சூா் அரசு பெண்கள்உயா்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை எம்எல்ஏ. தேவராஜி திறந்து வைத்து மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் செயற்பொறியாளா் அண்ணாதுரை, உதவி பொறியாளா் லாவண்யா, தலைமையாசிரியா் ஞானசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com