விசமங்களம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட  கிராம மக்கள்.
விசமங்களம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூா்குப்பம், உடையாமுத்தூா் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாழும் அருந்ததியா் சமூக மக்கள் பல ஆண்டுகளாக வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளனா். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்து திருப்பத்தூா்- திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் பேச்சு நடத்தியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து வட்டாட்சியா் நவநீதம் தலைமையிலான அதிகாரிகள் குழு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com