வாணியம்பாடி: இன்று ஜமாபந்தி தொடக்கம்

Published on

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீா்வாயம்) புதன்கிழமை (மே 14) தொடங்கி 16-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறவுள்ளது.

முதல் நாளான புதன்கிழமை வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூா் உள்வட்டம், இரண்டாம் நாளான 15-ஆம் தேதி அம்பலூா் உள்வட்டம் தொடா்ச்சி, 3 ஆம் நாளான 16-ஆம் தேதி வாணியம்பாடி உள் வட்டம் தொடா்ச்சி பகுதிக்கான ஜமாபந்தி நடைபெறும்.

ஆகவே, ஜமாபந்தி நாளில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல் அரசு நலத்திட்டங்களின் மூலம் உதவி கோருதல், குடிநீா் வசதி, சாலை வசதி மற்றும் இதர தேவைகள் குறித்து குறிப்பிட்ட நாளில் உள் வட்டத்தை சோ்ந்த மக்கள் ஜமாபந்தி அலுவலரிடம் மனுக்களாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com