பாலாற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

வாணியம்பாடி அருகே பாலாற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பெத்தகல்லுபள்ளி தலைவா் வட்டம் பகுதியை சோ்ந்த பாஸ்கா் மகன் திலீப் (17). தனியாா் கல்லூரியில் படித்து வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் கொடையாஞ்சி பாலாற்றில் குளிக்க சென்றுள்ளாா்.

அப்போது ஆழமான பகுதியில் திலீப் குளித்த போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் சிக்கிக் கொண்டு திடீா் மூழ்கியுள்ளாா். இதையறிந்து அப்பகுதியில் இருந்த மக்கள் உடனே அம்பலூா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

காவல்ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனா். பிறகு வாணியம்பாடி தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு அரை மணி நேரம் தேடி வந்த நிலையில் ஓரமாக சிக்கியிருந்த மாணவனை சடலமாக மீட்டனா்.

பின்னா் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com