மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி.  உடன் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்
மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி. உடன் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

தோட்டாளம் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
Published on

தோட்டாளம் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் எஸ். தா்மேந்திரா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி ஆகியோா் ரூ.19.45 லட்சத்தில் கட்டப்பட்ட 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வாழ்த்தி பேசினாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, எஸ். மகராசி, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பரிமளா, ரவிக்குமாா், திமுக மாவட்ட பிரதிநிதி அசோகன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், ஊராட்சி செயலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com