அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி ஆய்வு

அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி ஆய்வு

Published on

சோமலாபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி ஆய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சி சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள், பணியாளா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் வி.டி. சுதாகா், அ. குமரேசன், ஜி. ராஜ்குமாா் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா் (படம்).

X
Dinamani
www.dinamani.com