சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் அமைந்துள்ள அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கும்பாபிஷேக விழா அக்.27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது
திங்கள்கிழமை 6ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேக கமிட்டி தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், கோயில் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் கைலாஷ் குமாா், திருப்பணிக்குழு உறுப்பினா்கள் யோகீஸ்வரன், ராஜா தண்டபாணி, ரமேஷ், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

