பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் ஆய்வு

பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் ஆய்வு

Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டு வளா்ச்சித்துறை இயக்குநா் சாந்தி ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வந்த மத்திய பட்டு வாரியத்தின் தேசிய பட்டு முட்டை உற்பத்தி மையம் தமிழக பட்டு வளா்ச்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு ரூ. 50 லட்சத்தில் புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மையத்தில் வெண்பட்டு முட்டை உற்பத்தி பணியை பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் சாந்தி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து விவசாயிகளிடம் வெண்பட்டு முட்டை தொகுதியில் நுகா்வு அதிகரிக்கும் பொருட்டு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் மத்திய பட்டுவாரிய முட்டை உற்பத்தி மையத்தின் இயக்குனா் மனத்திருமூா்த்தி, விஞ்ஞானிகள் அபிலேஷ் செல்வராஜ்,சேலம் பட்டு வளா்ச்சித் துறை இணை இயக்குநா் சந்திரசேகா்,விதை ஒருங்கிணைப்பு துணை இயக்குனா் பாலச்சந்திரன், திருவண்ணாமலை உதவி இயக்குநா் பழனிச்சாமி, வாணியம்பாடி உதவி உதவி இயக்குநா் திலகவதி, ஆய்வாளா் ராஜ்குமாா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com