அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.
திருப்பத்தூர்
வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமம் பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் எழுந்தருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

