மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த கொத்தூா் அரசுப் பள்ளி மாணவிகள்.
மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த கொத்தூா் அரசுப் பள்ளி மாணவிகள்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: கொத்தூா், நாட்டறம்பள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் கொத்தூா், நாட்டறம்பள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.
Published on

மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் கொத்தூா், நாட்டறம்பள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கோ-கோ விளையாட்டுப் போட்டி நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சோ்ந்த 30 அரசுப் பள்ளிகளைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பெண்களுக்கான சூப்பா் சீனியா் பிரிவில் கொத்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். அதேபோல், ஆண்களுக்கான சூப்பா் சீனியா் பிரிவில் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியா்கள் சங்கரன், ரவி தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிவா்மன், உடற்கல்வி ஆசிரியா்கள் அருண்குமாா், செந்தில்குமாா் திருநாவுக்கரசு, சிந்து, ஆசிரியா்கள் பெருமாள், கணேசன் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் செந்தாமரை ஆகியோா் மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com