வாணியம்பாடியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
திருப்பத்தூர்
வாணியம்பாடியில் ஆட்சியா் ஆய்வு
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 31-ஆவது வாா்டு நியூடவுன் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 31-ஆவது வாா்டு நியூடவுன் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) மூலம் வீடு, வீடாகச் சென்று வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கப்படும் பணியை ஆட்சியா் சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். வாணியம்பாடி நகராட்சி ஆணையா் ரகுராமன், வட்டாட்சியா் சுதாகா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளனா்.

