பெரியாங்குப்பம் ஊராட்சியில் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
திருப்பத்தூர்
சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜையிட்டு பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜையிட்டு பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சி, காந்தி நகா் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 4.43 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்க ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பூமி பூஜையிட்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.
ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, ஊராட்சித் தலைவா் டி.பி.ரவீந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவிக்குமாா், ஒன்றிய துணைச் செயலா் வினோத்குமாா், மாவட்டப் பிரதிநிதி தெய்வநாயகம், மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா.சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

