மல்லகுண்டா ஊராட்சி தகரகுப்பம் கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் கட்டும் பணிக்கு நடைபெற்ற பூமிபூஜை.
திருப்பத்தூர்
மல்லகுண்டாவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் தகரகுப்பம் கிராமத்தில் ரூ.5.68 லட்சம் மதிப்பில் கழிவுநீா் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை காலை ஊரட்சி மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா் தலைமையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மல்லிகா முனிசாமி, வாா்டு உறுப்பினா்கள் ராஜகோபால், பழனிசாமி மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

