தினமணி செய்தி எதிரொலி... திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தினமணி செய்தி எதிரொலி... திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published on

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா் என செய்தி வெளியானதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பழக் கடைகள், தள்ளுவண்டிகள், பலகார கடைகள் உள்ளன.

இதனால் பேருந்தில் ஏற முடியாமல் பயணிகள் சிரமத்துக்குளாகின்றனா். மேலும், பேருந்துகளை இயக்குவதற்கு நடத்துநா்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள், தகராறுகள் ஏற்படுகின்றன.

இது குறித்து செவ்வாய்க்கிழமை தினமணியில் படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து, புதன்கிழமை திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின்பேரில், நகரமைப்பு ஆய்வாளா் கௌசல்யா தலைமையில் நகராட்சி பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com