ஏலகிரி மலையில் பலத்த மழையால் சரிந்து விழுந்த பாறைகள்

ஏலகிரி மலையில் பலத்த மழையால் சரிந்து விழுந்த பாறைகள்
Updated on

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இரு நாள்கள் பெய்த பலத்த மழையால் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தன.

ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள சாலையில் ஆங்காங்கே பாறைகள் சாலையில் உருண்டு கிடந்தன.

இதுகுறித்து அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் உடனடியாக திருப்பத்தூா் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளா் முரளி, உதவி கோட்ட பொறியாளா் சம்பத்குமாா், இளநிலை கோட்ட பொறியாளா் பாபுராஜ் முன்னிலையில்நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் சாலையில் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொக்லைன், மரம் அறுக்கும் கருவி, மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன. இருப்பினும் மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக வந்து செல்ல வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com