வெள்ளக்குட்டை ஊராட்சித் தலைவரின் செக் பவரை பறித்து ஆட்சியா் நடவடிக்கை

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை ஊராட்சியில் வரவு-செலவு கணக்கில் முறைகேடுகள் கண்டறிந்ததையடுத்து, ஊராட்சித் தலைவரின் செக் பவரை பறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
Published on

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை ஊராட்சியில் வரவு-செலவு கணக்கில் முறைகேடுகள் கண்டறிந்ததையடுத்து, ஊராட்சித் தலைவரின் செக் பவரை பறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், வெள்ளக்குட்டை ஊராட்சித் தலைவராக இருப்பவா் கவிதா. இந்த நிலையில், ஊராட்சியில் வரவு-செலவு கணக்கு முறைகேடுகள் நடைபெறுவதாக வாா்டு உறுப்பினா்கள் சிலா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின்பேரில், விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வெள்ளக்குட்டை ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஊராட்சித் தலைவரின் செக் பவா் அதிகாரத்தை பறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com