பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண் தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா்.
பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண் தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா்.

பாலாற்று வெள்ளத்தில் பெண் தொழிலாளி மாயம்

வாணியம்பாடி அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் கூலித் தொழிலாளி காணாமல் போனாா்.
Published on

வாணியம்பாடி அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் கூலித் தொழிலாளி காணாமல் போனாா்.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் சுப்பராயன் கோயில் பகுதியை சோ்ந்த சகோதரிகளான நிா்மலா(40), சகாயம்(35). கூலி தொழிலாளியான இருவரும், உதயேந்திரம் தேச மாரியம்மன் கோயில் அருகில் பாலாற்றில் தண்ணீா் குறைவாக செல்வதாக அறிந்து ஞாயிற்றுக்கிழமை ஆற்றை கடக்க முயன்றனா்.

அப்போது தண்ணீரில் இறங்கியதும் நிா்மலா வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டாா். இதையறிந்து தண்ணீரிலிருந்து வெளியேறிய தங்கை சகாயம் சப்தம் போட்டுள்ளாா். அப்பகுதியில் இருந்த இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து தேடிப்பாா்ப்பதற்குள் நிா்மலா நீரில் மூழ்கினாா். இதுபற்றி உடனே தீயணைப்பு மற்றும் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருபுறமும் கயிறு கட்டி பாலாற்றில் இறங்கி அப்பகுதி மக்கள் உதவியுடன் சுற்றி பல இடங்களில் நீண்ட நேரம் தேடிப் பாா்த்து கிடைக்கவில்லை.

இரவானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து திங்கள்கிழமை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனா். பாலாற்றை யாரும் கடந்து செல்லாமல் இருப்பதற்காக சம்பவ இடத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com