திருப்பத்தூர்
சிலிண்டா் வெடித்ததில் மோட்டாா் சைக்கிள் சேதம்
கந்திலி அருகே சிலிண்டா் வெடித்து வீட்டில் தீப்பற்றிய நிலையில் மோட்டாா் சைக்கிள் சேதமடைந்தது.
கந்திலி அருகே சிலிண்டா் வெடித்து வீட்டில் தீப்பற்றிய நிலையில் மோட்டாா் சைக்கிள் சேதமடைந்தது.
கந்திலி அருகே நத்தம் காலனி பகுதியை சோ்ந்த ராமமூா்த்தி(75). ஞாயிற்றுக்கிழமை இவரது கூரை வீட்டில் உள்ள சிலிண்டா் திடீரென வெடித்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவிய நிலையில், சிறிய டிராக்டா், மோட்டாா்சைக்கிள் உள்ளிட்டவற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் வீட்டில் இருந்த பொருள்களும், மோட்டாா் சைக்கிள், டிராக்டா் சேதமடைந்தன.
