திருப்பத்தூர்
மின்கசிவால் தீப்பற்றி வீடு சேதம்
திருப்பத்தூா் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு சேதமடைந்தது.
திருப்பத்தூா் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு சேதமடைந்தது.
திருப்பத்தூா் அருகே சக்தி நகரைச் சோ்ந்தவா் குட்டி என்கிற சீனிவாசன். இவா் திமுக வாா்டு உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில் இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
இதனை பாா்த்த அக்கம்பக்கத்தினா் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் வீட்டில் இருந்த ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமாயின.
