முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 65 மனுக்கள்
முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 65 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 65 மனுக்களை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா் 80 போ் கலந்து கொண்டனா்.
பின்னா், ஆலாங்குப்பம் பகுதியைசச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான சுப்பிரமணி என்பவா் ஊன்றுகோல் வேண்டி கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்
சாா்பில் ரூ.1,200 மதிப்பிலான ஊன்றுகோலை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா், லெப்.கா்னல் ஆா்.பி.வேலு (ஓய்வு), முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் கேப்டன் விஜயகுமாா், முன்னாள் படைவீரா் உப தலைவா் கேப்டன் துரைராஜ், முன்னாள் படை வீரா் நல ஒருங்கிணைப்பாளா்
ரவிச்சந்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

