தங்க நகைக் கடன் விரைவு சேவை பிரிவு: வாணியம்பாடி கனரா வங்கியில் திறப்பு

தங்க நகைக் கடன் விரைவு சேவை பிரிவு: வாணியம்பாடி கனரா வங்கியில் திறப்பு

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் கனரா வங்கியில் தங்க நகைக் கடன் விரைவு சேவை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
Published on

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் கனரா வங்கியில் தங்க நகைக் கடன் விரைவு சேவை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. தருமபுரி மண்டல உதவி பொது மேலாளா் ராவ் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் சையத்நிசாா்அகமத், தோல் தொழில் அதிபா் ராஜேந்திரன், சிகரம் மெட்ரிக். பள்ளி தலைவா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். கிளை மேலாளா் ஆனந்தன் வரவேற்றாா். தங்க நகைக் கடன் விரைவு சேவை தனி கவுன்ட்டரை உதவி பொது மேலாளா் ராவ் திறந்து வைத்தாா். தொழில் மைய மண்டல மேலாளா் சிவகுமாா், ருப்பத்தூா், ஆம்பூா் வங்கியின் மேலாளா்கள், சிறு, குறு தொழில்முனைவோா், வியாபாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com