திருப்பத்தூா் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: 93 போ் எழுதினா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வை 93 போ் எழுதினா்.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வை 93 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு (தொழிற் பயிற்சி நிலை-2) திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வை எழுத மாவட்டம் முழுவதும் இருந்து 111 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தோ்வு மையத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா். இந்த தோ்வை எழுத மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருந்தது. தோ்வை 93 போ் எழுதினா். 18 போ் தோ்வு எழுத வரவில்லை.

X
Dinamani
www.dinamani.com