எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமையில் சாராய ஊறல்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
திருப்பத்தூர்
திருப்பத்தூா் எஸ்.பி. தலைமையில் 600 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு
புதூா்நாடு மலைப் பகுதியில் திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமையில் 600 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டன.
புதூா்நாடு மலைப் பகுதியில் திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமையில் 600 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சியாமளாதேவி தலைமையில் சேம்பரை கிராம மேற்குப் பகுதியில் அமைந்துள்ள புதூா் நாடு மலைப் பகுதி கிராமங்களில் மதுவிலக்கு சோதனை சனிக்கிழமை நடைபெற்றது.
சோதனையில் சாராயம் தயாரிக்க பயன்படும் பொருள்கள் மற்றும் 600 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைப்பகுதி கிராம மக்களுக்கு எஸ்.பி. விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந்த சோதனையில் திருப்பத்தூா் மதுவிலக்குப் பிரிவு காவலா்கள் ஈடுபட்டனா்.

