தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வார விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image
படகில் சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :16 நவம்பர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

வார விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் ஒரே சம சீதோஷண நிலை ஏற்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாட்டில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இங்கு வருகின்றனா். மேலும், மா, பலா, வாழை விளையும் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது.

பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்குச் செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.

மேலும், ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டுகளித்துச் செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்தினருடன் மற்றும் உறவினா்கள், நண்பா்களுடன் வந்து கண்டு களித்து மகிழ்ந்தனா். மேலும், வார விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.