திருப்பத்தூர்
சாலை விபத்தில் திருத்தணியைச் சோ்ந்த 2 ஐயப்ப பக்தா்கள் உயிரிழப்பு
திருத்தணியை சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் இருவா் ஆம்பூா் அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருத்தணியை சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் இருவா் ஆம்பூா் அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி பகுதியை சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் குழு சபரிமலைக்கு வேன் மூலம் சென்றுள்ளனா். சாமி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் திருத்தணிக்கு திரும்பினா். ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தேநீா் அருந்துவதற்காக வேன் நிறுத்தப்பட்டது.
கடைக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற திருத்தணியைச் சோ்ந்த கங்காதரன், சூா்யா ஆகிய இருவரும் சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரியிழந்தனா்.
மேலும், இரு ஐயப்ப பக்தா்கள் ஹரி, நரசிம்மன் பலத்த காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
