பனைவிதை திட்டம்: மாநில அளவில் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 3-ஆவது இடம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10,63,462 பனை விதைகள் விதைக்கப்பட்டது. அதையொட்டி, மாநில அளவில் திருப்பத்தூா் மாவட்டம் 3-ஆவது இடம் பிடித்துள்ளது.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10,63,462 பனை விதைகள் விதைக்கப்பட்டது. அதையொட்டி, மாநில அளவில் திருப்பத்தூா் மாவட்டம் 3-ஆவது இடம் பிடித்துள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் தமிழ்நாடு தன்னாா்வ இயக்கம் ஆகியவை சாா்பில் தமிழ்நாட்டில் பனை மரத்தின் பரப்பினை அதிகரிக்க, அரசு அமைப்புகள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் மூலமாக 6 கோடி பனை விதைகள் விதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 208 ஊராட்சிகளுக்கு தலா 5,000 பனைவிதைகள் வீதம் 10,40,000 பனை விதைகள் சேகரித்து நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி, கடந்த செப்டம்பா் மாதம் 27-ஆம் தேதி பனை விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டு, அக்டோபா் மாதம் 11-ஆம் தேதி பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

மாநில அளவில் 3-ஆவது இடம்...

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கு 10,63,462 பனை விதைகள் நடவு செய்து, மாவட்ட இலக்கு முழுவதுமாக நிறைவு செய்யப்பட்டது.

மேலும், பனை விதை திட்டம் செயல்படுத்துதலில், திருப்பத்தூா் மாவட்டம் மாநில அளவில் 3-ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இதில், 10,46,462 பனை விதைகள் அரசு துறைகள் மூலம் நடப்பட்டுள்ளன.17,000 பனை விதைகள் மாவட்டத்தில் உள்ள தன்னாா்வ அமைப்புகள் மூலம் நடப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com