திருப்பத்தூர்
காணாமல்போன இளைஞா் ஏரியில் சடலமாக மீட்பு
ஜோலாா்பேட்டை அடுத்த பெரியமூக்கனூா் வேடன் வட்டத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் கோவிந்தராஜி (31). இவா் கடந்த 21-ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
ஜோலாா்பேட்டை அடுத்த பெரியமூக்கனூா் வேடன் வட்டத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் கோவிந்தராஜி(31). இவா் கடந்த 21-ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் கோவிந்தராஜியை பல இடங்களில் தேடி வந்தனா். இந்நிலையில் அம்மணாங்கோயில் ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் அங்கு சென்று ஏரியில் இறந்தவரின் உடலை மீட்டு விசாரித்ததில் காணாமல் போன கோவிந்தராஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
