திருப்பத்தூர்
திருப்பத்தூரில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து அரசமைப்பு முகப்புரையை வாசித்தாா். அதையடுத்து அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சென்னகேசவன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அதேபோல் திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி வி.சியாமளாதேவி தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

