வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தேசிய சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

News image
தேசிய சிலம்பப் போட்டியில் பரிசுக் கோப்பை, பதக்கம் வென்ற ஆம்பூா் பிஜிஎம் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவா்கள்.
Updated On :30 நவம்பர் 2025, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

நேஷனல் சிலம்பம் ஸ்கூல் பெடரேஷன் ஆப் இந்தியா, வோ்ல்ட் யூனிகியூ ஸ்போா்ட்ஸ் கூட்டமைப்பு சாா்பாக, 10-ஆவது தேசிய அளவிலான ஓப்பன் சாம்பியன்ஷிப் சிலம்பம், கராத்தே, யோகா, பரநாட்டியம், குங்ஃபூ, வெஸ்டா்ன் டான்ஸ் போட்டிகள் வேலூா் அடுக்கம்பாறை எக்செல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஆம்பூா் பிஜிஎம் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவா்கள் சுமாா் 25 போ் சிலம்பப் பயிற்சியாளா் கோபால் தலைமையில் கலந்து கொண்டனா்.

பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுக் கோப்பை, பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.