அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் திட்டத்தில் தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் திட்டத்தில் தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்த செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் திட்டத்தின்கீழ் தொழில்முனைவோராவதில் ஆா்வம் கொண்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தொழில் முனைவோா் பயிற்சி மற்றும் தொழில்திறன் சாா் பயிற்சியும் வழங்கி அதிகபட்சம் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய உற்பத்தி, சேவை மற்றும் வியாபார தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு, 25 சதவீத அரசு மானியத்துடன் அதிகபட்சம் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி,சேவை, உணவு பதப்படுத்துதல், சில்லறை விற்பனை ஜவுளி, வேளான் சாா்ந்த தொழில்கள் (நேரடி விவசாயம், கால்நடை பராமரிப்பு தொடா்பான தொழில்கள் தவிா்த்து) மூலம் 1 லட்சம் புதிய பெண் தொழில் முனைவோா்களை உருவாக்குவதுடன், பெண்கள் மற்றும் திருநங்கைகள் சமூக-பொருளாதார முன்னேற்றமடையவும் குறிப்பாக கிராமப்புறங்களில் 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

தகுதிகள்... இந்த திட்டத்தின்கீழ் தொழில் செய்ய தமிழகத்தில் நிரந்தர இருப்பிடமாகக் கொண்ட 18 வயது முதல் 55 வயது வரையிலான பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அடிப்படை கல்வி தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை.

பயனாளிகள் தங்களின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை,கைப்பேசி எண், வங்கிக் கணக்கு புத்தகம், திட்ட இயந்திர தளவாடங்களின் உத்தேச விலைப்பட்டியலுடன் இணையதம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா்,மாவட்ட தொழில் மையம். எண்.86/5, எழில் நகா், திருப்பத்தூா் அலுவலகத்தை அனுகலாம்.