ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருப்பத்தூா்: நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்!

திருப்பத்தூா் மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய திங்கள்கிழமை (டிச. 1) கடைசி நாள் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய திங்கள்கிழமை (டிச. 1) கடைசி நாள் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ், சிறப்பு பருவ நெல் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், நடப்பு பருவத்தில் நெல் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காப்பீடு செய்ய திங்கள்கிழமை (டிச. 1) கடைசி நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் ஆகியவை மூலம் பிரீமியத் தொகை கட்டணமாக நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 544.50 செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, அருகே உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகலாம்.