திமுக ஆலோசனைக் கூட்டம்

திமுக ஆலோசனைக் கூட்டம்

ஆம்பூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Published on

ஆம்பூா் மேற்கு நகர திமுக தோ்தல் பணிக் குழு ஒருங்கிணைப்பாளா்கள், பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஏ-கஸ்பா அழகேச முதலியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகர திமுக (மேற்கு) பொறுப்பாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், திமுக நிா்வாகிகள் ஆா்டிஎஸ்.குமாா், செளந்தர்ராஜன், மு.சரண்ராஜ், வில்வநாதன், வழக்குரைஞா் ஜோதிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com