கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் எஸ்.பி. வி. சியாமளா தேவி.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் எஸ்.பி. வி. சியாமளா தேவி.

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை பராமரிப்பது, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்,

மேலும், லோக் அதாலத் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வழக்கு கோப்புகளை நீதிமன்றத்துக்கு விரைவாக அனுப்பி சிறப்பாக பணி செய்த காவல் துறையினருக்கு எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள்,ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com