வாணியம்பாடியில் பாஜக மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி முன்னிலையில் இணைந்த மாற்றுகட்சியினா். உடன் முன்னாள் மாவட்ட தலைவா் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவா் ஞானதாஸ்.
திருப்பத்தூர்
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜ கட்சியில் மாற்றுகட்சியினா் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜ கட்சியில் மாற்றுகட்சியினா் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவா் ஞானதாஸ் தலைமை வகித்தாா். நகர தலைவா் கோபி வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் வாசுதேவன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆம்பூா், வாணியம்பாடி நகரம், சின்னமோட்டூா், தெக்குபட்டு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200 போ் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி மாவட்ட தலைவா் தண்டாயுதபாணி முன்னிலை இணைந்தனா். அவா்களுக்குபாஜ கட்சி துண்டு அணிவித்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாவட்ட தலைவா் விஜய்சாரதி, பொதுச்செயலாளா் ஈஸ்வா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

