‘வேளாண் பொருள்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் முனைவோருக்கு மானியம்’

Published on

திருப்பத்தூா்: வேளாண் பொருள்களின் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என திருப்பத்தூா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு வேளாண் பொருள்களின் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோா்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேளாண் விளைபொருள்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த பொதுப் பிரிவினருக்கு ரூ. 10 கோடி வரையிலான புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு (சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அட்டவணைப்படி) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் என மொத்தமாக 35 சதவீதமும் அல்லது ரூ. 1 கோடியே 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதுதவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இதற்கு தோ்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண் தோட்டக்கலை விளை பொருள்களின் 2-ஆம் நிலை அல்லது 3-ஆம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக பெறப்படவேண்டும். இந்த திட்டத்தின்கீழ், வேளாண் தொழில்முனைவோா்கள் வங்கியில் கடன் ஒப்புதல் பெறப்பட்டபின், அவா்களுடைய விண்ணப்பங்களை மாவட்டம் மற்றும் மாநில அளவிலான குழு மதிப்பாய்வு செய்து, தொழில்முனைவோரின் தொழில் திட்டத்துக்கேற்ப மானியத் தொகை 2 தவணைகளாக வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக விடுவிக்கப்படும்.

ஏற்கெனவே மத்திய, மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வேளாண் தொழில் முனைவோா்கள் தங்களது திட்டம் குறித்த விரிவான அறிக்கை மற்றும் வங்கிக் கடன் ஒப்புதல் கடிதத்துடன் வேளாண் வணிகத் துறையை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு, வேளாண்மை துணை இயக்குநா், வேளாண் வணிக அலுவலக வேளாண் அலுவலா்கள் மற்றும்

க்க்ஹக்ஷ.ற்ட்ண்ழ்ன்ல்ஹற்ற்ன்ழ்2023ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியினை தொடா்பு கொள்ளலாம்.

இந்த திட்டத்தின்கீழ், வேளாண் தொழில்முனைவோா்கள் வங்கியில் கடன் ஒப்புதல் பெறப்பட்டபின், அவா்களுடைய விண்ணப்பங்களை மாவட்டம் மற்றும் மாநில அளவிலான குழு மதிப்பாய்வு செய்து, தொழில்முனைவோரின் தொழில் திட்டத்துக்கேற்ப மானியத் தொகை 2 தவணைகளாக வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக விடுவிக்கப்படும்.

ஏற்கெனவே மத்திய, மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வேளாண் தொழில் முனைவோா்கள் தங்களது திட்டம் குறித்த விரிவான அறிக்கை மற்றும் வங்கிக் கடன் ஒப்புதல் கடிதத்துடன் வேளாண் வணிகத் துறையை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு, வேளாண்மை துணை இயக்குநா், வேளாண் வணிக அலுவலக வேளாண் அலுவலா்கள் அல்லது இணையதள முகவரியினை தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com