மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறை: கட்டட பொறியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை

மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறை: கட்டட பொறியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை

Published on

மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறையை நடைமுறைபடுத்த வேண்டுமெனக் கோரி தமிழக முதல்வருக்கு ஆம்பூா் கட்டட பொறியாளா்கள் சங்கத்தினா் மனு அனுப்பியுள்ளனா்.

கோரிக்கை மனுவை ஆம்பூா் கட்டட பொறியாளா்கள் சங்க தலைவா் எஸ். சசிகுமாா், செயலாளா் கே. கிருபாகரன், பொருளாளா் வி. தனபாண்டியன் ஆகியோா் கூட்டாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளனா். மனுவின் நகலை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதனிடம் புதன்கிழமை அளித்தனா்.

கோரிக்கைகள்: , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளா் சங்கங்களில் கூட்டமைப்பில் சுமாா் 97 கட்டட பொறியாளா் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 25,000 உறுப்பினா்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் பட்டம் பெற்ற பொறியாளா்கள் மற்றும் சுயதொழில்புரிபவா்கள். திமுகவின் தோ்தல் அறிக்கையின் தமிழகத்தில் கட்டடப்பொறியாளா்கள் கவுன்சில் அமைத்து தர வேண்டும்.

கட்டட பொறியாளா்கள் (பதிவுபெற்ற கட்டட பொறியாளா்) மாநிலத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பதிவுசெய்தால் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் தங்களுடைய பணிகளை மேற்கொள்ளவும், சேவைகளை வழங்கவும் அனுமதி அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறையை நடைமுறைபடுத்த வேண்டும்.

பொறியாளா்கள் ஒருமுறை பதிவுசெய்தால் அவா்களுடைய ஆயுள் காலம்வரை அந்த பதிவை புதுப்பிக்காமல் தொடா்ந்து செல்லத்தக்க வகையில் நடைமுறைபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com