திருப்பத்தூர்
பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் பணிகள்: திருப்பத்தூா் எம்எல்ஏ ஆய்வு
திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு தயாரிக்கும் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆய்வு செய்தாா்.
தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
அதையொட்டி, திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பகுதியில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவு தயாரிக்கும் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி நேரில் சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். மேலும், குறித்த நேரத்துக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் காலை உணவு சென்றடைய வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
இதில், நகராட்சிஆணையா் சாந்தி, தலைமை பொதுக் குழு உறுப்பினா் ந.அரசு, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

