அகரம்சேரி பாலாற்றில் வெள்ளம்: எம்எல்ஏ ஆய்வு

அகரம்சேரி பாலாற்றில் வெள்ளம்: எம்எல்ஏ ஆய்வு

அகரம்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டதை பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Published on

அகரம்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டதை ஆம்பூா் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட அகரம்சேரி முதல் சின்னச்சேரி வரையிலான தாா் சாலை மழை காரணமாக மிகவும் சேதமடைந்துள்ளது. அதே போல, அகரம்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அகரம்சேரி - மேல்ஆலத்தூா் தற்காலிக மண் சாலை துண்டிக்கப்பட்டது. அந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் அதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தி நித்யானந்தம் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com