வேலூா்: மழை பாதிப்புகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
பருவ மழை பாதிப்புகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இடா்ப்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்கலாம்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் அதிக மழை பெய்துள்ளது. மழையினால் ஏற்படும் இயற்கை இடா்ப்பாடுகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க அரசு அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. வேலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் வீடுகள் சேதம், கால்நடைகள் சேதம் மற்றும் மனித உயிா்ச்சேதம் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
வருவாய்த் துறை கட்டுப்பாட்டு அறை எண்கள்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் - 1077, 0416 2258016, வட்டாட்சியா் அலுவலகங்கள் வேலூா் - 0416 2220519, அணைக்கட்டு 0416 2276443, காட்பாடி 0416 2297647, கே.வி. குப்பம் 0416 2997219, குடியாத்தம் 04171 221177, போ்ணாம்பட்டு 04171 292748.
கிராமப்பகுதிகளில் நீா்தேங்குதல், கால்வாயில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரிகளுக்கு நீா்செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுதல் போன்ற புகாா்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள்: வட்டார வளா்ச்சி அலுவலகங்கள்- வேலூா் 7402606477, கணியம்பாடி 7402606481, அணைக்கட்டு 7402606485, காட்பாடி 7402606489, கே.வி.குப்பம் 7402606493, குடியாத்தம் 7402606498, போ்ணாம்பட்டு 7402606504.
மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிப் பகுதிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் நீா் தேங்குதல், கால்வாயில் அடைப்பு ஏற்படுதல், மழைநீா் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுதல் போன்ற புகாா்களுக்கு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள்-வேலூா் மாநகராட்சி அலுவலகம் 9280097911, குடியாத்தம் நகராட்சி அலுவலகம் 04171 220051, போ்ணாம்பட்டு நகராட்சி அலுவலகம் 04171 232131, பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகம் 8925809286, 8825579403, ஒடுக்கத்தூா் பேரூராட்சி அலுவலகம் 8925809285, 9677511469, பென்னாத்தூா் பேரூராட்சி அலுவலகம் 8925809287, 7708505351, திருவலம் பேரூராட்சி அலுவலகம் 8925809288, 9600367660.
மின்தடை ஏற்படுவது, மின்கம்பங்கள் சாய்வது மற்றும் மின்மாற்றிகள் பழுதடைவது தொடா்பாக வேலூா் காந்திநகா் மின்சார வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்: 9487899841, 9487899842, 9487899843, 9487899844, 9498794987.
மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுவது, சாலைகளில் தண்ணீா் தேங்குவது, சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுவது குறித்த புகாா்கள் தெரிவிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களின் கைப்பேசி எண்கள்: வேலூா் உள்கோட்ட இளநிலை பொறியாளா் 9597089380, காட்பாடி உள்கோட்ட உதவிப் பொறியாளா் 8939269296, குடியாத்தம் உள்கோட்ட உதவிப் பொறியாளா் 9597833373.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்: 0416- 2256802.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இடா்ப்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்கலாம்.
