ஆம்பூா் கோயில்களில் கந்த சஷ்டி விழா

ஆம்பூா் கோயில்களில் கந்த சஷ்டி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் கோயில்களில் கந்த சஷ்டி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, செங்கோல் வீதியுலா, ஸ்ரீ அருணகிரிநாதா், வாரியாா் சுவாமிகள் விழாக் குழு சாா்பாக சண்முகக் கவசம் அகண்ட பாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயிலில் முருகப் பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்ஹாரம், சாயாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் பள்ளத் தெரு அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com