திருப்பத்தூர்
கா்நாடக மது பாக்கெட்டுகள் விற்றவா் கைது
வாணியம்பாடி தாலுகா ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிசமுத்திரம் பகுதியில் ரோந்து பணி
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 116 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷ் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
