ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாண உற்சவ சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாண உற்சவ சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

முருகப் பெருமான் திருக்கல்யாணம்

ஆம்பூா் கோயில்களில் முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா் கோயில்களில் முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஊஞ்சல் சேவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும், மேல்கிருஷ்ணாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com