சாலை விபத்தில் ஆந்திர மாணவா் உயிரிழப்பு

Published on

வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ் மகன் முக்கோட்டிஈஸ்வா் (19). இவா், சென்னை தனியாா் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தாா். இந்த நிலையில், சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியில் இருந்த மாற்று டயா் (ஸ்டெப்னி) திடீரென கழன்று பைக் மீது விழுந்தது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த முக்கோட்டி ஈஸ்வரை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com