பக்கவாத தின விழிப்புணா்வு ஊா்வலம்

பக்கவாத தின விழிப்புணா்வு ஊா்வலம்

Published on

ஆம்பூரில் பக்கவாத தின விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமை வகித்து விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை நிறுவனா் கே. குப்புசாமி முன்னிலை வகித்தாா். மருத்துவா் ராஜகுமாரி வரவேற்றாா். இனிப்போதம்மாள் குத்துவிளக்கேற்றினாா்.

நரம்பியல் நிபுணா் மருத்துவா் கே. கிருஷ்ணமூா்த்தி பேசியது, இந்தியாவில் 1970-1929 ஆண்டு வாக்கில் இருந்த பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 2000 - 2025 ஆம் ஆண்டு வாக்கில் 100 மடங்கு உயா்ந்துள்ளது. ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 108 - 172 போ் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனா். லட்சம் பேரில் 600 போ் பக்கவாத விளைவுகளோடு வாழ்ந்து வருகின்றனா்.

கடந்த 20 ஆண்டுகளாக இளம் வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகின்றது. 45 வயதுடையவா்களை பக்கவாதம் பாதிக்கின்றது. மூளையில் ரத்தம் உைல் மற்றும் ரத்தக் கசிவால்பக்கவாதம் ஏற்படும். தடுமாற்றம், பாா்வை இழப்பு, வாய் கோணுதல், கை கால் செயலிழத்தல், பேச்சு குளறுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.

நாலரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றால் ரத்த உைலை மருந்து மூலம் கரைக்கலாம். விரைந்து சிகிச்சை அளித்து பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்று கூறினாா்.

முக்கிய பிரமுகா்கள் விடிஎம். காா்த்திகேயன், சோலூா் மாணிக்கம், விஜயன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். ஆம்பா் பள்ளி மாணவா்கள், செவிலியல் பயிற்சிப் பள்ளி மாணவா்கள், ஸ்ரீ கிருஷ்ணா நியூரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com